பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் : ரூ 50 லட்சம் பரிசு

மும்பை

ந்திய கிரிக்கெட் கமிட்டி, உலகக்கோப்பை போட்டியில் கலந்துக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணியில் பங்கு பெற்ற அனைவருக்கும் தலா ரூ 50 லட்சம் பரிசளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடை பெறும் உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் களமிறங்கி உள்ளது.  அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.    மற்றும் அணியை சேர்ந்த ஜர்மன் பிரீத் கவுர் 20 பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடித்து போட்டியில் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.  இது போல் பல சாதனைகளை இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

தற்போது இந்திய கிரிக்கெட் கமிட்டி, பெண்கள் அணியினரின் இந்த சாதனையை பாராட்டி, ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் தலா ரூ. 50 லட்சம் பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளது.  அதே போல் ஆதரவு ஊழியர்கள் (சப்போர்டிங் ஸ்டாஃப்) ஒவ்வொருவருக்கும் ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இங்கிலாந்துடன் மோதும் பெண்கள் அணி, வெற்றி பெற்றால் முதன் முதலாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இந்தியப் பெண்கள் அணி என பெயர் பெறும்.   ரசிகர்களும் அதற்காக காத்திருக்கின்றனர்.