முன்னாள் தேசியவாத கட்சி தலைவர் தாரிக் அன்வர் ராகுல் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்

சென்னை:

முன்னாள் தேசியவாத கட்சி தலைவர் தாரிக் அன்வர் ராகுல் முன்னிலையில் இன்று  மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் தாரிக் அன்வர். தேசியவாத  கட்சியின் நிறுவனர் களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

ராகுலுடன் தாரிக் அன்வர்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து கட்சி தலைவர் சரத்பவாருக்கும், தாரிக் அன்வருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியின் நோக்கங்கள் தவறானவை அல்ல என்று சரத்பவார் கூறியிருந்தார். சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது என்று கூறிய அன்வர்,  பவார் மீது கடும் அதிருப்தி அடைந்து தேசியவாத கட்சியில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

மேலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வந்த தாரிக் அன்வர் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த தாரிக் அன்வர், ஏற்கனவே காங்கிரசில் கட்சியில் இருந்து 1999ம் ஆண்டு வெளியேறிய நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.