பிஜி தீவில் கடுமையான நில நடுக்கம் : சுனாமி ஏற்படுமா ?

பிஜி

பிஜி தீவில் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதால் சுனாமி ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

                                             மாதிரி புகைப்படம்

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பிஜி தீவு.   இந்த தீவில் இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.   இந்த நிலநடுக்கம் பிஜி தீவுக்குள் மையம் சுமார் 500 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.   இந்த மையம் லெவுகா தீவுகளுக்கு 270 கிமீ கிழக்கிலும் டோங்கா தீவுகளுக்கு 443 கிமீ மேற்கிலும் அமைந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி இருந்தது.    இது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டாலும் சேதம் அதிகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.  சேதங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.