இந்தோனேசியா : ரிக்டரில் 6.4 அளவில் நில  நடுக்கம்

ம்பாக்

ந்தோனேசியாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுளது.

இந்தோனேசியாவில் உள்ளது லம்பாக் என்னும் தீவு.   இன்று அதிகாலை இந்த தீவின் அருகே திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.    அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இந்த நிலநடுக்கம் 6.4 என ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் கடும் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட் வெளியேறி தெருவில் குழுமினர்.   மீண்டும் நில நடுக்கம் ஏற்படும் என்னும் அச்சத்தினால் அவர்கள் தெருவிலேயே இன்னும் உள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கோ அல்லது பொருட்களுக்கோ சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஏதும் வரவில்லை.