கெர்மெடிக் தீவு, நியுஜிலாந்து

நியூஜிலாந்து நாட்டின் கெர்மடிக் தீவு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நியுஜிலாந்து நாட்டில் வடகிழக்கு பகுதியில் உள்ளது கெர்மெடிக் தீவு, இந்த தீவில் ஒரு அரசு வானிலை மைய வானொலி நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. மற்றபடி இந்த தீவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை.

இந்த தீவிலிருந்து சுமார் 800-1000 கிமி தள்ளி நியுஜிலாந்து வடக்கு தீவுகள் அமைந்துள்ளன.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த கார்மெடிக் தீவில் நேற்று நள்ளிரவு 11.55 மணிகு கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியது. இந்த அளவு நிலநடுக்கம் ஏற்படும் போது பல கட்டிடங்கள் இடிந்து விழுவது வழக்கமாகும். .

இந்த நிலநடுக்கம் சுமார் 34.4 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவில் பதிவாகி உள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.