டெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை. விரைவில் அதன் விவரங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.