பூமியின் அளவில் ஒரு புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!

புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்‍ஐடி) விஞ்ஞானிகள்.

அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில் சுற்றி வருகிறது என்றும், ஒரு வினாடிக்கு 81 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, ஒரு மணிநேரத்திற்கு 1,81,000 மைல்கள் தூரத்தைக் கடக்கிறது அந்த துணைக்கோள்.

கடந்த 2017ம் ஆண்டே இந்த துணைக்கோள் தொடர்பான சிக்னல்களை சாசா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, அந்த சிக்னல்கள், தனது சூரியனைச் சுற்றிவரும் ஒரு துணைக் கோளினுடையது என்று கூறப்பட்டது.

அந்த புதிய கோள் K2-315b என்று பெயரிடப்பட்டது. அந்த துணைக்கோளின் சுற்றுப்பாதை 0.95 என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதன்மூலம், அந்தக் கோள் பூமியின் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.