நிகோபார் தீவுகளில் நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

நிகோபார்

நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக ஏற்பட்டுள்ளது.

நிகோபார் தீவுகள் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்திய ஆராய்ச்சி மையம் இது குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் அளிக்கவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் உண்டானதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளி வரவில்லை.