பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!

 

 

 

பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று இரவு 7:56 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.0 அலகுகளாக பதிவாகி இருக்கிறது. இதை  அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, பல வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு  முன் பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மூன்று முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: -earthquake-0iல Papua-New-Guinea, பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்!
-=-