அந்தமானில் ரிக்டர் அளவுகோலில் 5.0 நில நடுக்கம்

போர்ட் பிளேயர்

ந்தமானில் இன்று மாலை சுமார் 6.55 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.

நேற்று முன் தினம் இந்தோனேசியாவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.  அதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் சுமார் 850 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   அங்கு மீட்புப் பணி நடந்து வரும் அதே வேளையில் மற்றொரு நில நடுக்கம் குறித்த செய்தி வந்துள்ளது.

இன்று மாலை சுமார் 6.55 மணிக்கு அந்தமான் தீவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.    ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.   இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ளன.  பொருட்கள் கீழே விழ்ந்துள்ளன.   இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர்.

அதை ஒட்டி மக்கள் வீட்ட்டி விட்டு வெளியே வந்து திறந்த வெளியில் தங்கி உள்ளனர்.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட  பாதிப்புக்கள் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளி வரவில்லை.