அந்தமானில் நிலநடுக்கம்….வீடுகள் குலுங்கின

அந்தமான்:

அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பெரு, -பிரேசில் நாட்டு எல்லைகளிலும் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது