அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு!

ஸ்ஸாமில் இன்று காலை திடீரென  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவு கோவில் 5.2-ஆக பதிவு ஆகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து  வீதிக்கு வந்தனர்.

அஸ்ஸாம் கோக்ரஜார் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 6.45  மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 5.2 என பதிவாகியுள்ளது.

இந்த மிதமான  நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால், பதறியடித்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் இது பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவித  பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை..