இந்தியா, மியான்மர் எல்லையில் கடும் நிலநடுக்கம்

டில்லி:

இந்திய மற்றும் மியான்மர் எல்லை பகுதியில் இன்று நண்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவானது.

இந்தியா (மணிப்பூர்) மற்றும் மியான்மர் எல்லையில் இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.