வெலிங்டன்

நியுசிலாந்து நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியுசிலாந்து அமைந்துள்ள பகுதி  பசிபிக்  பெருங்கடலின் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது.  இப்பகுதியில் உள்ள பல நிலத்தட்டுகள் அவ்வப்போது நகர்வதால் இங்கு நில நடுக்கங்கள் மற்றும் எரிமலைகள் வெடிப்பத் ஆகியவை நிகழ்கின்றன.

இன்று காலை சுமார் 7 மணி அளவில் நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி இருக்கிறது.    இந்த நில நடுக்கம் சுமார் 33 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது..

இந்த நில நடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.  ஆயினும் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதம் குறித்த முழுத் தகவல்கள் ஏதும் வெளி வரவில்லை.