டில்லி,

டஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் மிதமான நிலஅதிர்வு உணரப்பட்டது.  ரிக்டர்  அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலஅதிர்வால் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில்  தஞ்சமடைந்தனர்.

டெல்லி, உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து‘ மத்திய அரசு சார்பில் துரித நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உத்தரகாண்ட் உள்ளிட்ட  பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மீட்புப்பணி, நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை செய்ய விரைந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பேர் கொண்ட இரு குழுக்கள் உத்ரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், காசியாபாத்திலும்  மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மற்றும் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நிலஅதிர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரியஅளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும்,

பாதிப்பு குறித்து தொடர்ந்து  கண்காணி்க்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசுகளிடம் இருந்து விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுள்ளார்.