சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு

காங்டாக்: சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலம், கங்க்டோக் பகுதியில் நண்பகல் 12.06 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக இந்த நில நடுக்கம் பதிவானது.

பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.