மேற்குவங்கம், ஒடிசாவில் நிலநடுக்கம்…வீடுகள் குலுங்கின

கொல்கத்தா:

மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்குவங்க மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹூக்லி பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடையில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.0 என பதிவாகியுள்ளது. கொல்கத்தா, கோபிபல்லவ்பூர், காரக்பூர், புருலியா-ஜர்கிராம் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் அதிகளவில் உணரப்பட்டது.

ஒடிசா மாநிலத்தின் பலசோர், மயூர்பஞ்ச் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. 2 மாநிலங்களிலுல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரரம் உடனடியாக தெரியவில்லை.