காபூல்: ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் அந்நாட்டின் இந்து குஷ் என்ற பகுதியில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  ஏதேனும் சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.