ஜப்பானில் நில நடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு

ப்பான் நாட்டில் இன்று காலை  திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ நகரின் ரெளஷூ பகுதி உள்பட சுமார் 60 கிமீ சுற்றளவுக்கு இன்று  காலை 8.30 மணியளவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், ஜப்பான் மட்டுமின்றி ரஷ்யா வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், வீட்டிலிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். மற்ற தகவல் ஏதும் இதவரை வெளியாகவில்லை.

முன்னதாக இன்று அதிகாலை 4.24 மணியளவில் கிரீஸ் நாட்டில் உள்ள ஜகிந்தோஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவில் இருந்ததாகவும், அதன் பாதிப்பு இத்தாலி, லிபியா, அல்பானியா நாடுகளிலும் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.