டெல்லியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

புதுடெல்லி:

டெல்லி-என்.சி.ஆரில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நொய்டாவிலிருந்து 19 கி.மீ தென்கிழக்கில் நேற்றிரவு 10.42 மணிக்கு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நடுக்கம் காரணமாக இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

டெல்லியின் சுற்றுப்புறத்தில் இரண்டு பூகம்பங்கள் தாக்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று இந்த நடுக்கம் ஏற்பட்டது.