லடாக்கில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்…

லடாக்: காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இன்று பிற்பகல் (செவ்வாய்க்கிழமை) திடீர்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது.

லடாக்கின் லே மாவட்டத்தின் அல்சி பகுதியில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.  இன்று பிற்பகல் 2.38 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

ஏற்கனவே கடந்த 25ந்தேதி 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.