4.1 ரிக்டர் அளவில் மணிப்பூர் மற்றும் மியான்மரில் நிலநடுக்கம்

இம்பால்:
மணிப்பூரில் இன்று காலை  4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் கட்டிங்கள் அதிர்ந்தன. மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

அதுபோல மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.


மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. உடனே தூங்கிக்கொண்டிருந்த மக்கள் பயந்து எழுந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நடுக்கம் காரணமாக பெரிய அளவில் பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இம்பாலில் ஜூன் 19-ம் தேதி 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. mதேபோல் சாண்டெல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி 3.2 ரிக்டர் அளவிலும், அதன்பின்னர் 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே சமயத்தில் மியான்மர் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சேத விவரம் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.