அந்தமானில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு

அந்தமான்,

ந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமான ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு ஆகி உள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டமான அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக  இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெவித்துள்ளனர். சேத விவரம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.