ந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 13ந்தேதி சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபாரில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த பிப்ரவரி 13ந்தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் இது 4.5 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்றைய நிலநடுக்கம் 4.8 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.