மணிலா: பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

அந்நாட்டின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானதாக பிலிப்பின்ஸ் நில அதிர்வு மற்றும் எரிமலை நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இன்று காலை 7.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 102 கி.மீ ஆழத்தில், கலடகன் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 11 கி.மீ தொலைவில், மணிலாவிலிருந்து 100 கி.மீ தெற்கே தாக்கியுள்ளது.

படங்காஸ், லாகுனா, கேவைட், ரிசால் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.