ஜகர்தா:

ந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக  பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு  வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணமான  டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி.ன இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள்,  வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று கூறிப்படுகிறது.