அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…. மக்கள் பீதி

நேற்று வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று  அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலையில் அந்தமான் தீவுகள் பகுதியில் நள்ளிரவு 1.51 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளத.

இது  ரிக்டர் அளவுகோலில் இது 4.5 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் அந்தமான் தீவுகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆனால், இந்த  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andaman Islands Region, earthquake, Earthquake of Magnitude:4.5, அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் நிலநடுக்கம், நிலநடுக்கம்
-=-