இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி

ந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மற்றும் மேற்கு சுலவேசி பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் சுனாமி தாக்கக் கூடும் என்று  எச்சரிக்கை விடுத்தது.

7.5 என்ற ரிக்டா் அளவுகோல்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுத்தகத்தில் அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. பலர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததற்கு ஏற்ப சுனாமி தாக்கியது.  பல நகரங்களில் சுனாமி தாக்கியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல கட்டிடங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் பலர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.