விழுப்புரத்தில் லேசான நிலநடுக்கம்? நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம்

விழுப்புரம்:

டலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில்  நேற்று நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பயத்தில்  ஆழ்ந்துள்ளனர்.

images

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.  அதேபோல பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, “மிக லேசான நில நடுக்கமாகவே இருக்கும். ஆகவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றனர்.