பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஈஸ்ட் பெங்கால் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வடகிழக்கு யுனைடெட் அணி.

முதல் பாதி ஆட்டத்தின்போது, 33வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் சுர்சந்திரா சிங், சேம் சைடு கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். மேலும் 36வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அந்த அணியினர் நழுவவிட்டனர். முதல் பாதி ஆட்ட முடிவில், வடகிழக்கு யுனைடெட் அணி முன்னிலைப் பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் நேரத்தில், வடகிழக்கு யுனைடெட் அணியின் ரோச்சர்செலா ஒரு கோடித்து, தனது அணிக்கான வெற்றியை உறுதிசெய்தார்.

எனவே, ஆட்டமுடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது வடகிழக்கு யுனைடெட் அணி. இத்தோல்வியானது, ஈஸ்ட் பெங்கால் அணியின் ஹாட்ரிக் தோல்வியாகும்.