டில்லி:

இந்திய வருவதற்கு முன் சுற்றுலா பயணிகள் அவர்களது நாடுகளில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு விட்டு வர வேண்டும் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற அல்போன்ஸ் கண்ணன்தனம் மாட்டு இறைச்சி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகள் தங்களது நாடுகளில் மாட்டு இறைச்சி சாப்பிட்டுவிட்டு, பின்னர் இங்கு வரலாம். ஒட்டுமொத்த உலகமும் இங்கு வந்து பார்வையிடலாம். நாங்கள் எங்களது வரலாற்றையும், நாட்டையும் நேசிக்கிறோம். இது அழகிய நாடு’’ என்றார்.

முன்னதாக கடந்த வாரம் மத்திய அமைச்சராக அல்போன்ஸ் பதவி ஏற்பதற்கு முன்பு கூறுகையில், ‘‘கேரளா மாட்டு இறைச்சி சாப்பிடும் மாநிலமாகும். இங்கு தொடர்ந்து மாட்டு இறைச்சி சாப்பிடப்படும். இது தொடரும். இதற்கு பாஜக.வுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது’’ என்று கடந்த 4ம் தேதி கருத்து தெரிவித்திருந்தார்.

அல்போன்சின் முந்தைய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி கேட்கையில், ‘‘இது சேவலுக்கு எருதுக்குமான கதை. நான் உணவுத் துறை அமைச்சர் கிடையாது. நான் சுற்றுலா துறை அமைச்சர்’’ என்றார்.