உணவுப்பொருள் வீணாவதை தடுக்க விரைவில் சட்டம்- மத்தியஅரசு

 

டில்லி,

ந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் உணவுப்பொருள் வீணாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் மன்கி பாத் நிகழ்ச்சிக்காக ரேடியோவில் பேசிய பிரதமர் மோடி, பல ஆயிரம் பேர் உணவில்லாமல் தவிக்கும் இந்தியாவில் பெரும் ஹோட்டல்களில் உணவுப் பொருள்கள் வீணாவது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ஒருவரால் இரண்டு இறால்களை மட்டுமே சாப்பிட முடியும் என்றால் அவருக்கு 5 இறால்கள் ஏன் தரப்படுகின்றன. இரண்டு இட்லி சாப்பிடும் ஒருவருக்கு 4 இட்லிகள் வழங்கப்படுவதேன்..இவ்வாறுதான் உணவும், மக்களின் பணமும் வீணாவதாக தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சாப்பிட அனுமதித்தல் மட்டுமே உணவுப் பொருள்கள் வீணாவதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஹோட்டல் அதிபர்களுடனான ஆலோசனைக்கூட்டம் விரைவில் நடக்கவிருப்பதாகவும் அதில், உணவுப் பொருள் வீணாகாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்துபேசி  முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்வான் தெரிவித்தார்.