இடுக்கி,

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற, பாரம்பரியம் மிக்க சாப்பாடு போட்டியில், இரண்டரை கிலோ அரிசி சாதத்தை அரை மணி நேரத்திற்குள் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்  அவருக்கு முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது.

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் சாப்பாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த வகையான போட்டிகள் அங்கு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை அந்தந்த பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், பகுதி சங்கங்கள், கிளப்புகள் சேர்ந்து நடத்து வழக்கம்.

இந்த சாப்பாடு போட்டி காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தும், இந்த போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி சாப்பாடு போட்டி  இடுக்கி மாவட்டத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இரண்டு ரவுண்டாக நடைபெற்ற இந்த போட்டியில், இறுதியாக 9 பேர் செலக்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கிடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

போட்டியாளர்களுக்கு கேரளாவின் பாரம்பரியமிக்க சம்பா அரிசி சாதத்துடன், குழம்பு, மோர், ஊறுகாய் போன்றவைகளும் பரிமாறப்பட்டன.

இந்த போட்டியில் கே.எச்.நசீர் என்பவர்  இரண்டரை கிலோ அரிசி சாதத்தை 30 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முதல்பரிசை தட்டிச்சென்றார். இவருக்கான முதல் பரிசு தொகை ரூ.5001 வழங்கப்பட்டது..

இரண்டாவது இடத்தை மானு, ஜீவா ஆகியோ இருவர் பெற்றனர். இவர்கள் 2 கிலோ அரிசி சாதம் மட்டுமே சாப்பிட்டதால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் போட்டியில் கலந்துகொண்டவர்கள் தலா 1கிலோ அரிசி சாதம் மட்டுமே சாப்பிட்டனர்.

இந்த சாப்பாடு போட்டியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓணம் பண்டிகையை யொட்டி  பாரம்பரியமிக்க இந்த சாப்பிடும் போட்டியான உணவுத்திருவிழா கேரளாவில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.