6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம்…!

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆகையால், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்  நீட்டிப்பு  செய்யப்பட்டது.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதன் காரணமாக  இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. எனவே மின் கட்டணம் செலுத்த மாற்ற மாவட்டங்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்த மாவட்டங்களுக்கு அதிக கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் வரை செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.