தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்: ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந் நிலையில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை தள்ளிவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்தார். வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதிகள், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை தள்ளிவைக்கக் கோரிய வழக்கை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.