ப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் மீண்டும் பரவ தொடங்கியிருப்பதால், அனைத்து நாடுகளையும் உஷாராக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த எபோலா வைரஸ் தாக்குதல் கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. முதன்முதலாக கினியா நாட்டில் பரவிய இந்த நோய, பின்னர் படிப்படியாக   சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட பல நாடுகளை தாக்கி வந்தது.

1976ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய்க்கு 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்பட்டது.

இதை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு வரை இந்த நோய் காரணமாக 28000 பேர் பாதிக்கப்பட்டதாகவும, 11,30 பேர் பலியானதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

இதுவரை கட்டுப்பாட்டுக்கள் இருந்த எபோலா நோய், தற்போது மீண்டும் பரவத்தொடங்கியிருப்பதாவ கூறப்படுகிறது.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான,  காங்கோ குடியரசு நாட்டில் இந்நோய் காரணமாக  18 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 36 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  காங்கோ குடியரசில் இருந்து மற்ற நாடுகளுக்கு நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு எடுத்து வருகின்றன.

எபோலா நோய்   மீண்டும் பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து நாடுகளும் உஷாராக இருக்கும்படி படி, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோய் எவ்வாறு பரவுகிறது…?

எபோலா வைரசால் தாக்கப்பட்ட ஒருவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுகிறது. அது தொடர்ந்து,  வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.

இந்த உயிர்க்கொல்லி  நோய்க்கு இதுவரை சரியான சிகிக்கை கிடையாது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் முயற்சிகளில் வாய் வழியான நீர் மறு நிறைப்பு சிகிச்சைமுறை அல்லது ஊசி வழியாக உட்புகுத்தல் செய்யப்படும் திரவங்கள் ஆகிய இவற்றில் ஒன்றைகொடுப்பது அடங்கும்.

இந்த எபோலா கிருமியினால் தொற்றப்பட்டவர்களில் 50% லிருந்து 90% வரையான மக்கள் பெரும்பாலும் உயிரிழந்து விடுகின்றனர் என்பதே உண்மை.