கின்ஷாஷா

காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா தாக்குதல் தொடங்கி இதுவரை 5 பேர் உயிர் இழந்துள்ளனர்.

 

உலகத்தின் பயங்கரமான ஆட்கொல்லியில் எபோலாவும் ஒன்றாகும்.  கொரோனாவைப் போல் இதற்கும் தடுப்பூசி மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் கிடையாது.  மிருகங்களிடம் இருந்து மனிதருக்குப் பரவிய இந்த வைரச் அதன்பிறகு மனிதருக்கு மனிதர் பரவ தொடங்கியது.  எபோலா வந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரு சில மாதங்களில் உயிர் இழந்து விடுவார்கள்.

கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த நோய் காங்கோ வில் முதலில் கண்டறியப்பட்டது.   இந்த வைரச் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களை பெருமளவில் தாக்கி உள்ளது.  இதுவரை இந்த வைரஸ் தாக்குதல் 20க்கும் அதிகமாக நடந்துள்ளது.  கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வைரஸ் ஆப்பிரிக்கா அல்லாத நாடுகளிலும் பர்வ 10000க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.

கடந்த சில வருடங்களாகக் கட்டுக்குள் இருந்த எபோலா இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.  தற்போது காங்கோ வில் உள்ள கிராமப்புறங்களில் கண்டறியப்பட்டுள்ளது.  காங்கோ நாட்டுச் சுகாதார அமைச்சகம் இதுவரை சுமார் 5 பேர் எபோலாவால் மரணம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது விரைவில் காங்கோ வில் உள்ள நகரப்பகுதிகளிலும் பரவ வாய்ப்புள்ளதாக  அரசு எச்சரித்துள்ளது.  உலக சுகாதார மையம் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகளை காங்கோவுக்கு அனுப்பி உள்ளது.   தற்போது எபோலா வேகமாகப் பரவி வருகிறது.  எனவே மக்கள் மிகவும்  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.