தேசிய நாடகப் பள்ளியின் நீண்டகால இயக்குநராகவும், பல தலைமுறை நடிகர்களின் குருவாகவும் இருந்தவர் இப்ராஹிம் அல்காஸி (வயது 94).

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திடீரென நேரிட்ட மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவருடைய மகன் ஃபைசல் அல்காஸி தெரிவித்தார்.

நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் இவரிடம் நடிப்பு பயிற்சி பெற்று, இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பலர்.

நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்ராஹிம் அல்காசிக்கான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”இந்திய தியேட்டர் ட்ராமக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து, பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்த இப்ராஹிம் அல்காசி, தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுவார். ட்ராமாக்கள் மற்றும் கலை மீது அவருக்கு இருந்த காதல் மிகப்பெரியது. அவரது குடும்பத்தினருக்கு என இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.