டில்லி

மலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை நடுநிலையுடன் நடந்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் வரும் 11 ஆம் தேதியில் இருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.   வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 23 அன்று நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.    தேர்தல் நடத்தை விதிமுறைகள் சென்ற மாதம் 10 ஆம் தேதியில் இருந்து அமுலில் உள்ளன.  இத்னால் வருமானத் துறை, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புக்கள் கடும் சோதனைகளை நடத்தி வருகிறது.

வருமானத் துறை தனக்கு கீழ் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மர்ரும் வருமான புலனாய்வுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்டு நிதி தொடர்பான குற்றங்களை கண்காணித்து வருகிறது.    சமீப காலமாக இந்த சோதனைகள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம அளிப்பது குறித்த புகாரில் கடும் சோதனைகள் நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த துறை அதிகாரிகள் நேற்று மத்தியப் பிரதேசம் மற்றும்  கர்நாடகாவில் பல அரசியல் தலைவர்கள் இல்லத்தில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.    சென்ற வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் பல அரசியல் தலைவர்கள் மறும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் இல்லங்களில் சோதனை நடத்தியது.

மத்தியப் பிரதேசத்திலும் டில்லியிலும் மபி முதல்வர் கமல்நாத் மற்றும் அவருக்கு நெருக்கமானவரகள் இல்லத்தில் நேற்று நடந்த  சோதனையை சுமார் 200 வருமான வரி அதிகாரிகள்  காவல்துறை துணையுடன் நடத்தி உள்ளனர்.   இந்த சோதனையில் சுமார் ரூ.10-14 கோடிகள் வரை ரொக்கப்பணம் பிடிபட்டதாகவும் அது வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் எனவும் கூறப்படுகிறது

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   ஆளும் கட்சியினர் தங்களுக்கு எதிரானவர்களை பழிவாங்க இந்த சோதனை நடவடிக்கைகளை செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் பலர் புகார் அளித்தனார்.   மேலும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தங்களை ஊழல் பேர்வழிகளாக தவறாக அரசு சித்தரிப்பதாக கூறி உள்ளனர்.

இது குறித்து தேர்தல் ஆணையம், “அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நிதியமச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.  இவை அனைத்தும் அமைச்சக அனுமதி இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.   எனவே இந்த அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்களை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் வலியுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளது.