வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை

புதுடெல்லி:

வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு இந்திய  தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வெளியிடுவதையும் தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்குள் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரம் தேர்தல் அமைதி என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் கூடாது.

அதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.