அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ: பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

டில்லி:

பேஸ்புக் சமூக வலைதளத்தில் பாஜக எம்எல்ஏ அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்டு பகிர்ந்தி ருந்தார். அதை உடனே அகற்றும்படி பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் உள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பாலகோட் தாக்குதலை நடத்திய இந்திய விமான அபிநந்தன் குறித்த தகவல்கள் பயன்படுத்தக் கூடாது  என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

மேலும்,   அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரங்களில் ஆயுதப்படைகள் குறித்து பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், அபிநந்தன் வீரச்செயலைக்காட்டி வாக்கு சேகரித்து வரும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை புறக்கணித்து அபிநந்தனின் புகைப்பங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விங் கமாண்டர் அபிந்தனின் புகைப்படைத்தை டெல்லி எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஷர்மா தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து  பேஸ்புக்கில், இந்திய மற்றும் தெற்காசியா விற்கான இயக்குனரான சிவநத் துக்ரல் (Shivnath Thukral) என்பவருக்கு கடிதம் எழுதி, இதுபோன்ற படங்களை உடனே நீக்க உத்தரவிட்டது.

அதை ஏற்ற பேஸ்புக் நிறுவனம், படத்தை அகற்றுவதாக உறுதியளித்த நிலையில்,  இந்திய தேர்தல் கமிஷனுடன் நாங்கள் இணைந்து பணிபுரிவோம் என்றும், தேர்தல் துஷ்பிரயோகத்தை தடுப்போம் என்றும் உறுதி கூறி உள்ளது.