போபால்: ஹேமர்ந்த கார்கரே மரணம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சையே அடங்காத நிலையில், பாபர் மசூதி தொடர்பான மற்றொரு சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார் பெண் சாமியார் சாத்வி பிரக்யா.

பாபர் மசூதியின் உச்சியில் ஏறி, அதை இடிப்பதற்கு உதவி செய்தேன். அந்த வாய்ப்பையும், அதற்கான சக்தியையும் அருளியதற்காக கடவுளுக்கு நன்றி. நான் அதை செய்துவிட்டேன்.

நம் நாட்டிலிருந்து ஒரு கறையை துடைத்துவிட்டோம். எனவே, ராமர் கோயிலை நிச்சயம் கட்டியேத் தீர வேண்டும்” என்று பேசியுள்ளார் அந்த பெண் சாமியார்.

ஒரு வேட்பாளர் என்ற முறையில், அவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

மதம் மற்றும் ராணுவம் சார்ந்த விஷயங்களை தேர்தல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பாரதீய ஜனதா கட்சியினர் அதை கொஞ்சமும் சட்டை செய்வதாயில்லை.

தேர்தல் ஆணையமும் தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

– மதுரை மாயாண்டி