தெலுங்கானாவில் முன்கூட்டியே தேர்தலை நடத்த தயார் : தேர்தல் ஆணையர்

தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் முன் கூட்டியே தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக மாநில முதன்மை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி செய்து வரும் தெலுங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம்  முடிவடைய இன்னும் நாட்கள் உள்ளது.  வரும் 2019 ஆம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.   ஒரு நாடு ஒரே தேர்தல் என்னும் நடைமுறையில் இதற்கடுத்த  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

பாஜகவின் இந்த முடிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களை பாராளுமன்ற தேர்தலுடன் நடத்தலாம் என முதல்வர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.    அத்துடன் அவரது இந்த யோசனைக்கு தெலுங்கானா மக்களும் ஆதரவு அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரஜத் குமார், ”தெலுங்கானா மாநில வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது.  வரும் 2019 ஜனவரி மாதம் 1 ஆம் தேதியன்று அதன் இறுதி வடிவம் பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும்.   தேர்தலை முன் கூட்டியே நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை எடுக்கும்.

மாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலுடன் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதில் எவ்வித அட்சேபமும்  இல்லை.   ஆணையம் எப்போதும் தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.