தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறி இஸ்லாமியர்கள் வாக்களிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பேசிய எழுந்த  புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க  மாநில சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக  நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பபதிவு நடைபெற்றுள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், மோதல்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,  தேர்தல் நடக்க உள்ள கூஜ் பெகார் என்ற பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். இங்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்தபோது,  முஸ்லிம்களின் வாக்கு வங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தார் என்றும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜக சார்பில், மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறப்பட்டது.
மனுவை ஆயவு செய்த தேர்தல் ஆணையம்,   தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.