தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 2016ம் ஆண்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட, முறையான இட ஒதுக்கீடு இல்லை என்று தொடரப்பட்ட வழக்கு மற்றும் அதன் மீதான தீர்ப்பு காரணமாக மறுவரையரை செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதன் காரணமாக உள்ளாட்சிஅமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தமிழக அரசு நியமித்து, அவர்களின் பதவி காலத்தை நீட்டித்தும் வந்தது. சில மாதங்களுக்கு முன்பு நீட்டிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 24ம் தேதி நீட்டிப்பு காலம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்த தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் ஏற்பாடு செய்து வருகிறது.

வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னம், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கான சின்னம், பொதுப்பிரிவு சின்னம் போன்றவற்றை ஆணையம் தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.