வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு! தேர்தல்ஆணையத்துக்கு அதிகாரம்

டெல்லி:

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

கள்ள ஒட்டு போடுவது, மற்றும் ஒரே நபர் பல வாக்குச்சீட்டுக்களை வைத்திருப்பது போன்றவற்றை தடுக்கும் வகையும், வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில்,  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதற்கான நடவடிக்கை கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தல் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தடை பட்டது. பின்னர் உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து,  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக  தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, சட்டத்துறை செயலாளர் நாராயண் ராஜூ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில்,வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு  தேவையான சட்ட திருத்தங்களை செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம் என்று சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.