தினகரனுக்கு குக்கர் சின்னமா? இந்திய தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

.

டில்லி

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கோரியதை இன்று உச்சநீதிமன்ற இன்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது

ஆர் கே நகர் இடைத் தேர்தலில் டி டி வி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.   அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.   இந்த சின்னத்தினால் தனக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியதால் வரப் போகும் உள்ளாட்சி தேர்தலில் அதே சின்னத்தை மீண்டும் பெற அவர் விரும்பினார்.  அதே சின்னத்தை வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டிருந்தது.  தேர்தல் ஆணையம், “உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் தான் சின்னம் ஒதுக்க முடியும்.   அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.   மேலும் தினகரன் அணி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி இல்லை.  எனவே தினகரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.