சென்னை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆதரவு தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக,முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் வைரக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, இதுகுறித்து விளக்கம்அளிக்க தேர்தல்ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, மாநில காவல்துறைதான் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறி உள்ளார்.

ஆனால், மாநில காவல்துறையோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டி உள்ளது.