தெலுங்கானாவில் விரைவில் தேர்தலா ? நடத்தை விதிமுறைகள் அமல்

டில்லி

தெலுங்கானா மாநிலத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் செய்யப்பட்டதை ஒட்டி விரைவில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவின் தெலுங்கான ராஷ்டிர சமிதி ஆட்சி செய்து வந்தது.    இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜூன் வரை உள்ள நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போதே சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார்.  அதை ஒட்டி சட்டபேரவை கலைக்கப்பட்டது.

இம்மாநிலத்துக்கான தேர்தல் தேதிகள் இன்னும்  அறிவிக்கப்படவில்லை.  ஆயினும் நேற்று முதல் இன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் அணையம் தெரிவித்தது.  அதை ஒட்டி விரைவில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.   அவர்கள் கருத்தை உண்மையாக்குவது போல் ஆணையம் நேற்று ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளது.

அந்த குழு தற்போது மாநிலத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள்,  வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவைகளின் இருப்பு எவ்வளவு என கணக்கெடுத்து வருகிறது.   மேலும் அந்த குழு தற்போதுள்ள வாக்குச் சாவடிகளின் விவரங்கள், வாக்காளர் பட்டியல் போன்றவற்றையும் தயார் செய்து வருகிறது.   இதனால் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்கலாம் என கூறப்படுகிறது.