சட்மன்ற தேர்தல்: செப்.11.ல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெலங்கானா மாநிலத்தில் ஆய்வு
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி வரும் 11ந்தேதி தேர்தல் நடத்துவதற்கான ஆய்வுகள் குறித்து மத்திய தேர்தல் அதிகாரிகள் தெலங்கான மாநிலத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவி வகித்து வந்த தெலங்கான ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் ஆட்சியின் பதவி காலம் இன்னும் 9 மாதம் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் எண்ணத்தில் சட்டப்பேரவையை கலைக்க முடிவெடுத்து, மாநிலஅமைச்சரவை ராஜினாமா கடிதத்தை மாநில கவர்னர் நரசிம்மனை சந்தித்து கொடுத்தார்.
அதையடுத்து சட்டசபையை கலைத்த ஆளுனர் நரசிம்மன், காபந்து அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தெலுங்கானாவில் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என சந்திரசேகர ராவ் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு இந்திய தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கான மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து, ஆய்வு நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 11ந்தேதி தெலங்கானா மாநிலம் செல்கின்றனர்.
மத்திய தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஐதராபாத் பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு மாநில சட்டமன்ற தேர்தல் குறித்துஆய்வு செய்து தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.